கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் பியாவோ ஷுடாங் (62) மற்றும் அவரது மனைவியான லாங் ஐகுன் என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இவரது மனைவி லாங் கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று, பியாவோ லாங்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அதாவது லாங்கின் சாம்பலைக் கொண்டு களிமண் கலசம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கலசம் என்னுடையது என்றும், அதனால், நான் இறந்த பிறகு தன்னை மனைவியுடன் அடக்கம் செய்யலாம் என்றும், நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றும் கூறினார்.