செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  நகரத்திற்கு நல்ல மாற்று திட்டங்கள் எல்லாம் கொண்டு வரணும். இந்த தாமிரபரணி இதன் பிறகு வெள்ளம் வரும்னு நிச்சயமாக வரும். மூன்று மாதத்துக்கு முன்னாடி சொன்னதுதான் இது எல்லாம்….  அதற்கு என்ன செய்ய வேண்டும் ? எப்படி திட்டமிடனும்…  நெல்லையில் உள்ள பாதாள சாக்கடை அது இன்னும் கட்டுறாங்க கட்றாங்க…. இன்னொரு 50 வருஷம் ஆயிடும்…..  நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு இருக்கு……

Infrastructure Satellite GA Mapping -ன்னு  இருக்கு. நாம் மறுபடியும் ஜப்பானுக்கு தான் போகணும். ஜப்பானில் இருக்கு.. நாம்  கேட்டா இங்க வந்து டெக்னாலஜி கொடுத்துட்டு போவான்.  அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.  எல்லாம் பண்ணுவாங்க….  அதில் என்னன்னா….  இந்த தெருவுல எவ்வளவு மழை பெய்தால்,  எவ்வளவு தண்ணீர் நிற்கும்…  அதற்கு எவ்வளவு அகலம்,  எவ்வளவு ஆழம்,  மழைநீர் வடிகால் வேண்டும்.கழிவுநீர் கால்வாய்  வேண்டும் என்று அவன் திட்டமிட்டு பிளான் பண்ணி கொடுப்பான்.

அதை நம்ம செயல்படுத்தினால் போதும். நம்ம என்ன பண்றோம் ? அங்க இருக்கிற அமைச்சருக்கு கீழே  இருக்கிற மாவட்ட செயலாளர்கள்…  மாவட்ட செயலாளர்களுக்கு கீழே  அங்கு இருக்கின்ற  நகர செயலாளர்….  நகர செயலாளர் கீழே கவுசிலர் எல்லாம் நீ 2 காண்ட்ராக்ட் எடுத்துக்கோ… நீ 3 எடுத்துக்கோ… மொத்தமா 10 சேர்ந்து நீ ஒருத்தர் எடுத்துக்கோ,  எனக்கு கமிஷன்  கொடுத்திடு…  இதுதான் நடக்குதே  தவிர,  அங்கங்க என்ன வேலை நடக்குதுன்னு இல்ல ? சின்னதா பெயருக்கு கட்டுகிறார்கள்…  அப்புறம் மழை நீர் வடிகால் பயன்படாது என தெரிவித்தார்.