
மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தை இல்லாததனால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரேஷ் உகாடா (28) மற்றும் அவரது மனைவி (25) இருவரும் தங்கள் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்றதும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தம்பதியினரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலதிக விசாரணையில், குழந்தை இல்லாததன் காரணமாக இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தம்பதியினரின் மரணத்திற்கான முழுமையான காரணத்தை அறிய போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.