மத்திய பிரதேசம், இந்தோர் நகரில் உள்ள பழமையான சீதலாமாதா மார்க்கெட்டில், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சர்ச்சையான முடிவால் சமூக அமைதி குலைந்துள்ளதைக் காண முடிகிறது. இங்கு உள்ள முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களை கடைகள் மற்றும் வேலையிலிருந்து இரண்டு மாதங்களில் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான நடவடிக்கைக்கு எதிராக, அங்கு கடை வைத்திருக்கும் ஹிந்துக் கடைக்காரர் பல்வந்த் சிங் ராதோர், தனது முஸ்லிம் பிஸினஸ் பார்ட்னரை ஆதரித்து, “நாங்கள் இருவரும் பிஸினஸ் பார்ட்னர்கள்… உண்மையில் இருவர் சகோதரர்களைப் போல தான்… எங்களுடைய கடைகள் ஒருங்கிணைந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் என்பதற்காக அவரை வெளியேற்றுவது தவறு. யாருடைய வயிற்றையும் அடைத்துவிடக்கூடாது…” என மனதை உருக்கும் வகையில் பேசினார்.
Balwant Singh Rathore (40), a shopkeeper in Indore, is opposing the forceful eviction of Muslim shopkeepers and salesmen from the city’s historic Sitla Mata Market.
“The harmony between Hindus and Muslims should not be shattered, and they should be given… pic.twitter.com/FSSiSx0RSQ
— काश/if Kakvi (@KashifKakvi) September 24, 2025
இந்த விவகாரத்திற்கு காரணம், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவின் மகன் எக்லவ்யா சிங் கவுர், சீதலாமாதா மார்க்கெட்டில் உள்ள 501 கடைகளிலும் முஸ்லிம் பணியாளர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், முஸ்லிம் வாடகையாளர் வைத்திருக்கும் கடைகள் 2 மாதங்களில் காலி செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு கூட்டத்தில் அறிவித்ததிலிருந்தே தொடங்கியது.
மார்க்கெட் சங்கத்தின் பொது செயலாளர் பப்பூ மகேஸ்வரி இதனை உறுதி செய்துள்ளார். இது, மார்க்கெட்டில் வேலை செய்யும் முஸ்லிம் இளைஞர்களிடையே பயம் மற்றும் எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் சிண்டூ சௌக்ஸி, “இந்தியாவின் அணி ஒற்றுமை குலைக்கப்பட்டால் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
