கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சு பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மேலும் குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் மழை நின்றதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிய தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.