தினமும் தலைமுடி சாப்பிட்ட வினோத சிறுமியின் செயலால் பெற்றோர்களும் டாக்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மனிதர்களின் மாறுபட்ட பழக்கவழக்கம் அவர்களின் உடலுக்கு தீங்கிழைக்கும் வகையில் அமைந்து இருப்பதை நம்மில் பலர் அறிவோம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சுவற்றில் உள்ள சுண்ணாம்பை  தங்கள் கையால் பெயர்த்து எடுத்து திண்பதை அனேகம் பேர் கேள்வி பட்டுள்ளனர்.  அதேபோல சில பெண்களும் தங்கள் தலை முடியை தாங்களே திண்ணும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தலை முடியை தின்று வந்த சிறுமியின் உடலில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்துள்ளர்னர். சேருமே சிறு வயதில் இருந்தே தலை முடியை சாப்பிட தொடங்கியுள்ளார். அதன் காரணமாக சாப்பிட்ட உணவு உடலில் சேராமல் அடிக்கடி மலம் கழிக்க தொடங்கினார்.

அத்துடன் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ரத்த சோகையினாலும் அவதிப்பட தொடங்கினாள். ஒரு கட்டத்தில் வயிற்று வலி தீவிரமானதால் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து விட்டனர். அதற்கு காரணம் சிறுமியின் செரிமான மண்டலத்தில் தலைமுடி பெரிய கட்டி போல உருண்டு திரண்டு இருந்துள்ளது.

அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய போது அந்த தலைமுடி கட்டியை பார்த்து மருத்துவர்களும் சிறுமியின் பெற்றோர்களும் அறிந்து அதிர்ந்து விட்டனர். இது பற்றி கூறியுள்ள மருத்துவர்கள் 15 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதப்படி தலைமுடி சாப்பிடும் பழக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் பழக்கவழக்கங்களை சிறு பருவத்தில் இருந்தே பெற்றோர்கள் கண்டுபிடித்து வர வேண்டும் என்று எச்சரிக்கை கலந்து அறிவுறுத்தியுள்ளனர்.