வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய சமூகத்தால் மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பாகும். இந்த  அமைப்பின் அதிகாரங்கள் தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசால் குறைக்கும் வகையில் புதிய மசோதாக்கள் இயற்றப்பட்டது. வக்பு அமைப்பின் மூலம் கொடுக்கப்பட்ட தொண்டு நிலங்களின் வக்பு வாரியம் உரிமை கோருவதை மாற்ற இந்த புதிய மசோதாக்கள் இயற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதால் பாஜக எம்.பி. ஜெகஜாம்பிகா பால்  இந்த மசோதா குறித்து விசாரணை நடத்த 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு தற்போது தெரிவித்த கருத்து சர்ச்சை கிளப்பி உள்ளது. லட்டு விவகாரத்திற்கு அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை அமைத்தார். இதன் தலைவர் பி.ஆர். நாயுடு. செய்தியாளர்கள் கூட்டத்தில் பி.ஆர். நாயுடு கூறியதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாகவே இருக்க வேண்டும் எனக் கூறினார். இதுகுறித்து ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதியில் மட்டும் முஸ்லிம்கள் அல்லாத நிலையை உருவாக்குகிறீர்கள். ஆனால் வக்பு அமைப்பில் மட்டும் முஸ்லிமல்லாத இருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என ஏன் கோரிக்கை வைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அரங்காவாலர் தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாவது, திருப்பதி இந்துக்கள் வழிபடும் கோவிலாகும். இங்கு அனைவரும் இந்துக்களாக இருப்பதே சனாதன தர்மம் எனவும், வக்பு அமைப்பு ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி அதோடு திருமலையை எவ்வாறு ஒப்பிட முடியும். இது குறித்த நடவடிக்கையை நாங்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம். என கூறியுள்ளார்.