ஆதார் கார்டு இந்தியாவின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் நாட்டிலுள்ள பல அரசு திட்டங்களை பயன்படுத்தவும், சேவைகளை பெறவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமெனில் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஆதார் கார்டின் புகைப்படத்தை ஈஸியாக மாற்ற முடியும். அதன்படி UIDAI-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை(uidai.gov.in) பார்வையிடவும் (அ) இந்த இணைப்பை (https://uidai.gov.in/) கிளிக் செய்ய வேண்டும்.

தற்போது “Aadhaar Update” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விபரங்களை நிரப்ப வேண்டும். அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அங்கிருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விபரங்களையும் பயோமெட்ரிக் வாயிலாக சரிபார்ப்பார். உங்களது ஆதாரில் புதுப்பிக்கப்படும் புது போட்டோவை பணியாளர் படம் எடுத்துக்கொள்வார்.

இச்சேவைக்காக 100 ரூபாய் மற்றும் gst கட்டணம் செலுத்தவேண்டும். ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகைசீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கைக்கான எண்ணை வழங்குவார். உங்களது போட்டோ 90 தினங்களுக்குள் புதுப்பிக்கப்படும். எனினும் ஆதார் கார்டில் புகைப்படத்தை புதுப்பிக்கும் முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்ய முடியாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். இதற்கு கண்டிப்பாக ஆதார் மையத்திற்கு போகவேண்டும்.