ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க சார்பாக சென்னை தி.நகரிலுள்ள கமலாயலயத்தில் செய்தியார்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பாஜக தமிழ்நாடு பொறுப்பாளரான சி.டி ரவி பேசியதாவது “தீய சக்திகளை வீழ்த்த 1972-ல் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். பணபலம் ஆட்சி அதிகாரத்தை தவறாக ஈரோட்டில் பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.க-வை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக தேவை. ஈரோடு தேர்தல் தமிழக பிரச்சனைகள் பற்றி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரிடமும் கலந்து பேசினோம்.

இதற்கிடையில் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்வோம். இருவரும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆகும்” என்று பேசினார். இதையடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது, விலைவாசி உயர்வால் மக்களிடம் தி.மு.க கெட்ட பெயர் எடுத்துள்ளது. பாஜக போட்டியிடுவதாக இருந்தால் தன் தரப்பு வேட்பாளரை நிறுத்த மாட்டோம். பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் முன்னர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நேற்று அண்ணாமலையை சந்தித்த பிறகு ஓபிஎஸ், கூடிய விரைவில் தர்மம் வெல்லும் என தெரிவித்திருந்ததார். ஆகவே விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.