மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வரும் நிலையில் தங்களால் முடிந்த அளவுக்கு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சீரடி சாய்பாபா கோவில் உண்டியலில் வரும் சில்லறை காசுகளை 14 கோவில்களில் உள்ள வங்கிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் லாக்கர் நிரம்பி வழிவதால் தற்போது சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகத்திடம் இருந்து சில்லறை காசுகளை வாங்குவதற்கு வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் கோவிலை கவனித்து வரும் ஸ்ரீ சாய் பாபா சனஸ்தன் ட்ரஸ்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய ரிசர்வ் வங்கி உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீரடி சாய்பாபா கோவில் நிர்வாக டிரஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.