ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ராங்பூர் என்ற கிராமத்தில் சூர்யா ஹரிஜன் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் வெளிமாநிலத்தில் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் இளைய மகன் வீட்டில் மூதாட்டி வசித்து வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் கிராமத்தில் இருப்பவர்களின் மாடுகளை மேய்த்து மூதாட்டி காலத்தை கழித்து வருகிறார். இந்த மூதாட்டி முதியோர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணத்தையும் வாங்கி வந்துள்ளார். ஆனால் மூதாட்டியின் விரல் ரேகை சரியாக பதியாததால் எஸ்பிஐ வங்கியில் மூதாட்டியின் பென்ஷன் பணம் ஏறவில்லை.

இதனால் மூதாட்டி பல கிலோமீட்டர் தூரம் உள்ள வங்கிக்கு தினந்தோறும் நடந்து சென்று பென்ஷன் பணத்தை வாங்கி வருகிறார். அந்த வகையில் ஒரு நாற்காலியின் உதவியோடு வெறும் காலில் சாலையில் வேகாத வெயிலில் மூதாட்டி பென்ஷன் பணத்தை வாங்க நடந்து சென்ற போது சிலர் அதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வங்கி அதிகாரி தெரிவிக்கையில் மூதாட்டியின் விரலில் அடிபட்டு இருப்பதால் அவரின் கைரேகை சரியாக பதியவில்லை. அதனால் தான் மூதாட்டி வங்கிக்கு நேரில் வந்து பென்ஷன் பணத்தை பெற்று கொள்கிறார். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.