நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் e-shram என்ற அரசு இணையதளத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ரேஷன் கார்டுகளை வழங்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.