உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உன்னோவ் என்ற பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சிறுமி மற்றும் அவர்கள் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில் 11 வயது சிறுமி தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த நேரத்தில் பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

இவர்கள் பாலியல் வன்கொடுமையின் மூலம் பிறந்த குழந்தையை கொலை செய்ய வேண்டும் எனவும் உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். ஆனால் இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் சிறுமியின் குடும்பத்தினரை வீட்டில் வைத்து பூட்டி பாலியல் குற்றவாளிகள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் சிறுமிக்கு பிறந்த 6 மாத குழந்தை 37 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாதிக்கப்பட்ட சிறுமியும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.