சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அங்கு வாழும் இந்தியர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூடான் நாட்டில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நரேந்திர மோடி சூடான் விவகாரம் குறித்து ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதன் மூலம் விரைவில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.