
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டைவேடத்தில் நடித்து இருந்த இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் டைரக்டர் ஷங்கர் இப்போது மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் இறங்கி உள்ளார். இதை தன் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Back on the sets of #Indian2 pic.twitter.com/B3ByCedXHc
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 16, 2023