ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி சேவைக்காக அமேசான் நிறுவனம் விமான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான குயிக்ஜெட் உடன் இணைந்து அமேசான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சேவையானது முதலில் டெல்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இது விமானத் துறைக்கு பெரிய முன்னேற்றம் என அந்நிறுவனம் தெரிவித்தது. Amazon நிறுவனமானது சென்ற 2016 ஆம் வருடம் அமெரிக்காவில் 36 சரக்கு விமானங்களுடன் விமான பார்சல் சேவையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.