
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரம் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை விக்ரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hey Fate. Time to deal them a better hand don’t you think?! Veera X Ragini / Aditha Karikalan X Nandini #ravanan #ps2 pic.twitter.com/ViHpE1ZW5p
— Vikram (@chiyaan) April 29, 2023