செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பொன்முடி கேஸ்ல பாருங்க.. 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு.  எத்தனை லட்சம் ? 2,64, 644 செம்மண் லோடு…  பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற மாதிரி சொல்லிக் கொடுக்கிறேன். கவர்மெண்ட்டுக்கு எவ்வளவு லாஸ் 28 கோடி ரூபாய்.  9 பேர் மேல கேஸ் போட்டு, பொன்முடி, அவுங்க குடும்பம் மற்றவர்கள்  எல்லாருமே சேர்த்து, 67 பேர் சாட்சி.

அந்த வழக்கில் உண்மை வெளியே வரணும், தண்டிக்கப்பட்டாகணும் என்ற அடிப்படையில், என்னையும்  இணைத்துக்கொள்ள வேண்டும் என மனு போட்டுள்ளோம். சந்திராயன் நிலவுக்கு அனுப்பி இருக்காங்க. ரோவர்,  லாண்டர் அப்படின்னு சொல்லி…  600 கோடி செலவு என  சொல்லி இருக்காங்க. அதுக்கு இந்த பொன்முடி கிட்ட சொல்லி 2,64,000 லாரியை பூமியில் இருந்து நிலவுக்கே வச்சா….  நடந்தே போயிரலாம் நாம்.

நிலவுக்கு எவ்வளவு கிலோமீட்டர் ? 3 லட்சத்து   85 ஆயிரம் கிலோமீட்டர். 2,84,000 லாரி எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு, அதுக்கு பிறகு நாம் அங்க இருந்து சாட்லைட் அனுப்பி இருக்கலாம். செலவு கம்மியா இருக்கும்.அப்படி முகம் சுளிக்கும் அளவுக்கு படு மோசமான நிர்வாகம் கொண்டு,  கொள்ளையை யே தொழிலாளாக கொண்ட ஒரு அரசு என்றால் ? இந்த விடியாதா அரசு தான்.

சீமான் வழக்கு குறித்து அட்வகேட் கிட்ட பேசி இருக்காரு. இவர் என்ன சொல்றாரு ? 2011-இல் வழக்கு போடப்பட்டிருக்கு. அதன் அடிப்படையில வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு,  அதுல திருமதி.விஜயலட்சுமி கம்ப்ளைன்ட் வித்ட்ரா பண்ணிக்கிறாங்க. 2011 முடிஞ்சிடுச்சு 15 வருஷம் ஆகுது.

15 வருடத்திற்கு பிறகு இந்த வழக்கை எடுக்க வேண்டியது என்ன ?  அப்போ இந்த அரசாங்கத்துக்கு சிங்…சாங்  தட்னா கேஸ் இல்ல.  அரசை விமர்சனம் பண்ணா கேஸ்.  எங்க IT விங் எத்தனை பேரு மேல கேஸ்…   பத்திரிகையாளர்கள் எத்தனை பேரு  மேல கேஸ். எல்லாரு மேலையும் கேஸ் என தெரிவித்தார்.