இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கின்றார். ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கின்றது. படத்திற்கு அனிருத் இசையமைக்கின்ற நிலையில் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் லியோ படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் விஜய்க்கு நிகரான ஹீரோவான அல்லு அர்ஜுன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.