
பொதுவாகவே இணையத்தில் ஏராளமான விலங்குகளின் விடியோக்கள் வைரலாகி வருவதுண்டு. இதனை இணையவாசிகளும் ரசிப்பார்கள். அந்தவகையில் குரங்கு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இயல்பாகவே குரங்குகள் மனநிலையை கணிப்பது கடினம். அவை என்ன செய்ய போகின்றன என்பது என்றுமே புரியாத புதிர். அதனால் தான், கணிக்க முடியாத அளவிற்கு பயங்கரமாக குறும்பு செய்யும் குழந்தைகளை பார்த்து குரங்கு சேட்டை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் சும்மா இருக்கும் தவளையை சீண்டும் குரங்கின் சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தவளை ஒன்று அமைதியாக ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அதனை மைக் டெஸ்டிங் செய்வதை போல, அதனை தொட்டு தொட்டு சுரண்டு, அது சத்தம் போடுவதை பார்த்து விலகுகிறது. இந்த வீடியோ வைரலாகிறது.
Testing the frog.. 😅
Sound on pic.twitter.com/v81YTx9lXp
— Buitengebieden (@buitengebieden) August 6, 2023