செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வார்டு 20இல் விளாங்குடி பகுதி, மதுரை மேற்கு தொகுதியில்….  தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து நாடகம் மேடையானது, ”சொக்கநாதபுரம் கலையரங்கம்” சொக்கநாதபுரத்தில் இருக்கும் அருள்மிகு காளியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைப்பது மிகப்பெரிய சந்தோசம்,  மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு ஒரு பாக்கியமாக நான் இதை கருதுகிறேன்.

இதற்கு அடுத்து நம்முடைய காமாட்சி நகர் 5வது தெருவில் அங்கு இருக்கின்ற நியாயவிலை கடைக்கு பூமி பூஜை 10 லட்சம் ரூபாய் செலவில் பூமி பூஜை போடுகிறோம். இது  12 லட்சம் ரூபாய், அது 10 லட்சம் ரூபாய் செலவில் நடந்துள்ளது. அடுத்த பூமி பூஜை போடக்கூடிய சூழ்நிலையில் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் புதிய போர்வெல் தண்ணி தொட்டியும்,  சின்டெக்ஸ் அமைப்பை அமைக்கும் பணிகளும் இன்னைக்கு நம்ம  AE சாருடைய கையில் இருக்கிறது.

அவர் ஒப்புதல் கொடுத்த உடனே போட்டுருவோம். அதே மாதிரி இந்த ஆண்டு நம்முடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் பாரதியார் நகர் புதிய போர்வெலுடன் தண்ணி தொட்டி அமைப்பதற்கும்,  நிவாரண நிதி கோரப்பட்டுள்ளது.  காரல் மார்க்ஸ் வீதியில் நியாய விலை கடை கட்டுவதற்கு 10 லட்ச ரூபாயில் கேட்டுள்ளோம். இதுவரைக்கும் 20ஆவது வார்டுல….  இந்த வார்டுல  செம்பருத்தி நகரில் ஒரு  அழகிய நடைபாதை பூங்கா  அமைத்துள்ளோம் என பட்டியல் போட்டார்.