வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்பது பற்றி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாநில அளவில் அரசுத்துறையானது பேரிடர் மேலாண்மைக்கென பல பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்க, தேசிய பேரிடர் மீட்புக்குழு துணை கமாண்டர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் பேசிய அதிகாரிகள் கூறியுள்ளதாவது, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளின் போது பேரிடர் மீட்புகுழு, மருத்துவ குழு, தீயணைப்பு குழு, பொதுப்பணித்துறை, ஆம்புலன்ஸ் போன்ற அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவ்வாறு செயல்பட்டால் தான் இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை உயிருடன் மீட்க முடியும் என்று கூறினார்கள்.