தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பிறகு செந்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA,  ஒவ்வொரு மாநகரத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும்  தனக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே குப்பை கழிவுகள் ஆற்றில் கொட்டுவதற்கு தீர்வு கிடைக்கும். இந்த மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அனைத்து வீடுகளுக்கு இணைபு வழங்கப்பட்டால்தான் கழிவு நீர்,ஆற்றில் கலப்பது  தடுக்கப்படும். குப்பை, மருத்துவ கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவது தடுக்கப்படும்.

பிரைவேட் நிறுவனங்களோ,  தனியார் மருத்துவ கல்லூரிகளோ…  கழிவுகளை ஆற்றில் கொட்டினால் இனிமிடியட்டா நோட்டீஸ் கொடுக்க குழு கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அளவில் 15 ஆயிரம் உறுதி மொழிகள் இருக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 500, 400, 300 என்ற அளவில் உறுதிமொழிகள் இருக்கின்றது. மாவட்ட அளவில் இருக்கின்ற உறுதி மொழியை இந்த குழு ஆய்வு பணிக்கு போவதால் ? சில வேலைகளை நாங்கள் வருவதற்கு முதல் நாளே கலெக்டர் செய்துவிடுகின்றார்.

நாங்கள் வருவதற்கு 15 ,20 நாளுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்புறோம். கலெக்டர் அதை பார்த்துவிட்டு,  உடனே சம்மந்தப்பட்ட அலுவலரை கூட்டி,  விரட்டி விரைவாக வேலை வாங்குறாங்க. அதனால 25% க்குமேல் பணிகள் நிறைவு பெறுகிறது. உதாரணமாக ரேஷன் கடை திறப்பது, தெருவிளக்கு போடுது, சின்ன சின்ன பணிகள்…  கலெக்டர் அளவில் நடவடிக்கை எடுப்பது, PDO, கமிஷ்னர் அளவில் நடவடிக்கை எடுப்பது என இது எல்லாம் கொஞ்சம் வேகமா  நடைபெறுகிறது.

பொதுமக்கள் கொடுத்த பட்டா மாற்றம் மனு, பட்டா வேணுங்கிற மனு,  மூன்று சக்கர வாகனம் உதவி மனு,  இந்த மாதிரி குழுவிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை இப்போ கூட கலெக்டர் கிட்ட கொடுத்துள்ளோம். கலெக்டர் அதன் மீது நடவடிக்கை எடுத்து ஒரு மாத காலத்திற்குள்  ஒவ்வொரு மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க ?  எந்த பயன்  அந்த மனுதாரருக்கு சென்று அடைந்தது என்ற விவர அறிக்கையை குழுவுக்கு அனுப்ப சொல்றோம். எல்லா கலெக்டரும் அதனை முறையாக செய்து விடுகின்றார்கள் என தெரிவித்தார்.