ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம் என்ன என்பது குறித்தெல்லாம் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் கட்சியை பதிவு செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி அவர் கட்சியை பதிவு செய்தால் அவருடைய அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் ?  அரசியல் களத்தில் அவருக்கான சாத்தியங்கள்,  வாய்ப்புகள் என்ன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து பேசிய  அரசியல் விமர்சகர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ய இருக்கிறார் என்று  விஜய்யினுடைய நடவடிக்கையை பார்தால் தெரியும்.

ஒரு ரசிகர் மன்றம் என்றால் ? அவர்களை நற்பணிகளை செய்வார்கள். அதற்காக மீனவர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி இப்படி பல்வேறு அணிகளாக பிரிந்து செயல்படுவது என்பது அரிதாக நடக்கும்.  அந்த வகையில் விஜய்னுடைய நடவடிக்கைகளை பார்த்திருந்தால் ?  அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாக தான் இத்தனை அணிகளை பிரித்து வைத்திருக்கின்றார்.

கிட்டத்தட்ட திராவிட கட்சிகளுக்கு இணையாக இந்த அணிகள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளன. அதுவும் மாவட்டம் தோறும்… வட்டம் வரைக்கும் பதவிகள் எல்லாம் பிரிக்கப்பட்டுள்ளன.  சிறப்பாக படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகிறேன் என்றெல்லாம் திட்டங்களை அறிவிக்கிறார். அங்கு அவர் சூசகமாக அரசியலை பேசுகிறார். என்ன அரசியலை பேசுகிறார் ? நாம் பெரியார் வழியில் தமிழக அரசியல் இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இந்த வகையில் பார்க்கும் போது தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்துடன் தமிழக அரசியலில் விஜய் கால் பதிப்பார் என்று நினைக்க தோன்றுகிறது என தெரிவித்தார்.