நாட்டில் இப்போது ஏராளமான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வேலை இல்லா இளைஞர்கள் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் பீகார் மாநில ஆளுநர் அசத்தலான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இன்று நாட்டின் 74-வது குடியரசு தின விழாவையொட்டி பீகார் மாநிலத்தில் காந்தி மைதானத்தில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில ஆளுநர் சவுகான் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் அரசு துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படும் என தகவல் தெரிவித்து உள்ளார். இதற்கென அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அரசுக்கு தேவையான துறைகளில் கூடுதலான பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் கூறி உள்ளார்.