கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய 106 நபர்களுக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசானது அறிவித்தது. அதன்படி 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஒருவருக்கு பத்ம விபூஷண் விருதும், 3 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 8 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் பிரபல தபேலா கலைஞா் ஜாஹிா் ஹுசைனுக்கு பத்ம விபூஷண் விருதும், தொழில் அதிபா் கே.எம்.பிா்லா, ஐஐஎஸ்சி இயற்பியல் துறைப் பேராசிரியர் தீபக் தா், பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூா் போன்ற 3 பேருக்கும் பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவர்கள் தவிர்த்து மகாராஷ்டிரத்தை சேர்ந்த மறைந்த பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் உள்பட 8 பேர் பத்ம ஸ்ரீ விருதைப் பெற இருக்கின்றனர். நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறும் சிறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவ்விருதுகளை வழங்கவுள்ளார்.