சென்ற ஓராண்டில் மட்டும் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறந்திருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயணச் சீட்டு வழங்க உருவாக்கப்பட்ட 140 சட்டவிரோத மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 1,081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையிலும் ரயில் நிலையங்களில் 17,756 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு அவர்கள் அனைவரும் முறைப்படி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  ஓடும் ரயில்களில் 209 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த தாய்மார்களுக்கு ரயில்வே பாதுகாப்புப்படை வீராங்கனைகள் பக்க பலமாக இருந்து உள்ளனர்” என  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது