நெல்லை-சென்னை இடையே விரைவான பயணத்திற்கு பெயர் பெற்ற வந்தே பாரத் ரயில் சேவை, நேற்று மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் என்ஜின் கோளாறு காரணமாக மாலை 4.15 மணி வரை தாமதமானதால் பயணிகள் அவதியுற்றனர். பயணத்தின் ஆரம்பத்தில்  பின்னடைவு ஏற்பட அதை சமாளிக்கும் வகையில்,

பயணத்தின் போது 89.9 kmph என்ற சராசரி வேகத்தை தக்கவைத்து ரயில் அதன் செயல்திறனை வெளிப்படுத்தி. ஒரு மணி நேரத் தாமதத்தை 18 நிமிட தாமதமாக குறைத்து , இரயில் 11.33 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெற்றிகரமாக  அடைந்த நிலையில்,  அதில் பயணித்த பயணிகள் வந்தே பாரத் ரயிலின் இந்த அசாத்திய திறன் குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.