பொதுவாகவே தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகமாக மது விற்பனை நடைபெறும். அந்த வகையில் தீபாவளியன்று நாள் ஒன்றுக்கு பல கோடி வியாபாரம் நடந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட தொடங்கி விட்டார்கள். இதனால் மது விற்பனை குறைந்துள்ளது.

பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்ட திரும்பும் வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை மது விற்பனை பெரிதளவில் இருக்காது. குறிப்பாக நகரங்களை காட்டிலும் கிராமபுறங்களில் அதிக அளவில் பக்தர்கள்மாலை போடுவதால்  கிராமங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை மிகவும் சரிவடைய வாய்ப்புள்ளது . அதாவது கார்த்திகை மாதத்தில் 10% முதல் 20 சதவீதம் வரை மது விற்பனை குறையலாம் என கூறப்படுகிறது.