வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரங்களை காவல்துறை சேகரிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதோடு தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்திலுள்ள வெளி மாநில தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். அதே நேரம் வதந்திகளை பரப்பிய 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் குறைந்திருக்கிறது என டிஜிபி தெரிவித்துள்ளார்.