1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டகளுக்கு தண்டனை வீதம் ஒரு ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையாக விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் அவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அனைத்து மேல்முறையீடு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

குறிப்பாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,  அந்த தொகையில் 5 லட்சத்தை குற்றம் புரிந்தவரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கீழமை நீதிமன்ற உத்தரவுகள் சரியானது என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு   ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டிருந்தால் ஜாமின் ரத்து செய்யப்படுகிறது. அவர்களை கைது செய்து   மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட  நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

நீதிமன்றம் காவல்துறை மூலமாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல்,   பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்த  வேண்டும்  என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவு எவ்வாறு செயல்படுத்தப்பட்டது ?

அதே சமயம் வாச்சாத்தி கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தர்மபுரி நீதிமன்றதால்  தண்டிக்கப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று தான் உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.   காவல்துறை வனத்துறை இந்திய வனப்பணி,  வருவாய்த்துறையைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.