தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வருகிற 17ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகி இருக்கும் “வாத்தி” படம் நேரடியாக வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, நரேன் உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கல்வியை மையப்படுத்தி ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் வாத்தி படத்தின் டிரைலர் இன்று (பிப்,.8) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் டிரைலர் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.