உர்பி ஜாவேத் தன் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை, மாடல் மட்டுமின்றி, ராப் பாடகரும் ஆவார். உர்பிக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நடப்பு ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலமாக உர்பி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கிடையில் உர்பி ஜாவேத் தன் அரைகுறை ஆடைகளை முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இருவரும் விரும்பாததால் மும்பையில் வாடகைக்கு வீட்டுதேட போராடி வருகிறார். அவர் அரைகுறையான ஆடை உடுத்துவது பிடிக்காத காரணத்தால் முஸ்லிம்கள் அவருக்கு வீடு கொடுப்பதில்லை.நான் முஸ்லீம் என்பதால் இந்துக்களும் எனக்கு வீடு கொடுப்பதில்லை என அவர் கூறுகிறார்.