இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பதிலடி தாக்குதல்கள் தொடர்ந்து நடத்துகின்றன. இதில் வான்வழி தாக்குதல்களில் இரு நாடுகளிலும் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவிகள் செய்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவப்படை அழித்து விடுகிறது. இஸ்ரேலுக்கும், ஈராணுக்கும் இடையே போர் அதிகரித்துக் கொண்டே வருவதால் அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிகளில் தனது பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா பல ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி அமெரிக்கா போர் கப்பலில் இஸ்ரேலுக்கு அனுப்பிய ஆயுதங்கள் பின்வருமாறு,பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டு வீச்சு விமானங்கள், போர் படைப்பிரிவுகள், டேங்கர் விமானங்கள் ஆகியவை ஆகும். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியதாவது, இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்கா தனது உறுதியை நிலைநாட்டும். மத்திய கிழக்கில் அமெரிக்க மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஆணையிட்டார். அதன் பேரில் இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது எனக்கூறியது.