நாடு முழுவதும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் மக்கள் பெரும்பாலும் UPI செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பேமென்ட் செய்யும் upi பயன்பாட்டில் புதிய மாற்றங்களை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு மேல் செயல்படாமல் இருந்த யுபிஐ ஐடிகளை செயலிழக்க செய்வதற்கு டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதனைப் போலவே 2000 ரூபாய்க்கு மேல் முதல் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இதற்கு 4 மணி நேர கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

இதன் மூலம் தவறாக பணத்தை அனுப்பி இருந்தால் அந்த புதிய பயனர் அதனை 4 மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மேலும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வணிக பரிமாற்றத்தில் 2000 ரூபாய்க்கு மேல் ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மூலம் செலுத்தும் போது 1.1% பரிமாற்ற கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.