
சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார். பின்னர் சுயநினைவை இழந்த அந்த சிறுமியை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் கிண்டி மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3000 அபாரதத் தொகையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.