சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மிக்ஜாம்  புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு உண்டாகி  இருக்கிறது. இதை அடுத்த தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  மத்திய இணைய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,  தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மழை  பாதிப்புகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி தற்போது ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறிது நேரத்திற்கு முன்னதாக டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  அதேபோன்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தற்போது இந்த ஆய்வு என்பது தொடங்கி இருக்கின்றது. மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளான வேளச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களை இவர் முழுமையாக இன்றைய தினம் பார்வையிட்டு,  எந்த அளவுக்கு மழை நீர் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோன்று மழை பாதிப்பில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள்?  கால்நடைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்பு,

தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்தித்து மழை வெள்ள பாதிப்பு தொடர்பான முழுமையான விவரங்களை கேட்டறிந்து….  நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு உத்தரவிட இருக்கிறார்.

குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மழை வெள்ள பாதிப்பு காரணமாக மத்திய அரசு உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5060 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று கடிதம் வாயிலாக ஏற்கனவே எழுதியிருந்தார். இது தொடர்பாக இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சரை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரிவாக கேட்டிருந்தார்.

தமிழக குறிப்பாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பிரதமர் நரேந்திர மோடியை  டெல்லியில்  நேரடியாக சந்தித்து முதல்வரின் கடிதத்தை வழங்கியிருந்தார். அதனடிப்படையில் தான் இந்த ஆய்வு என்பது  ஹெலிகாப்டர் மூலமாக நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் விரைவில் வர இருக்கிறார். அவரும் இந்த ஆய்வை தொடர்ச்சியாக மேற்கொள்ள இருக்கிறார்.