மிக்ஜாம் புயல் பாதிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு வருகின்றார். இந்த  ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தமிழக அரசுடன்,  தமிழக முதலமைச்சர் மு.  க ஸ்டாலின்,  அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளருடன்  ஆலோசனையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர்  எல்.முருகனும் ஆலோசனை மேற்கொள்ள இருகிறார்கள்.

அப்போது உடனடியாக  ஆயிரம் கோடி முதல் 2000 கோடி நிவாரணத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு சார்பில் முதல்வர் நேரடியாக வைக்க உள்ளார்.  அதனைத் தொடர்ந்து கூடுதலாக வெள்ள பாதிப்பு எந்த அளவு ஏற்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்ப நிவாரண உதவிகளை கூடுதலாக வழங்க வேண்டும்,

நிவாரணப் பொருட்களை மத்திய அரசு வழங்க வேண்டும். இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ச்சியாக இந்த மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தமிழக முதலமைச்சர் நேரடியாக வைக்க இருக்கிறார்.