சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் புரட்டி எடுத்த மிச்சாங் புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் 10 மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தலைமையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் களப்பணியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா மழையை ரசித்து நடனமாடியுள்ளார்.

இது குறித்து தெலுங்கு தேச கட்சி எக்ஸ் வலைதள பக்கத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது இயற்கை பேரிடர் ஏற்பட்ட காலத்தில் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம்.

ஆனால் இங்கு ரோஜா நடனமாடுகிறார் என பதிவிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் ரோஜாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகிறது.