தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். கோடங்கல்  தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக தேர்வானார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ளார். மேலும் தெலுங்கானா மாநில துணை முதல்வராக பட்டி விக்கிரமார்க மல்லு பதவி ஏற்று கொண்டார். முதலமைச்சருடன் சேர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

ஹைதராபாத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். மேலும் இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் 64 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி.