உக்ரைன் ரஷ்யா போர் கடந்த வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் ரஷ்யாவிற்கு அது பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த போர் ஒரு ஆண்டை கடந்துள்ள நிலையில் உக்ரைனில் தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்தியுள்ளது.

அதோடு இந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பான தகவல்கள் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது உக்ரைன் நாட்டில் தற்கொலை படை தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த தாக்குதலை ரஷ்ய ராணுவத்தால் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த உத்தரவானது அடுத்த மூன்று மாதங்களுக்குள் அமலில் வரும். உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் வலுவான இடத்தை அடைய முடியவில்லை. இதனால் தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.