
ஐரோப்பிய நாடுகளில் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இது முதல் முறையாக முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியாகும். இந்த கால்பந்து தொடர் போட்டியின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2 ஆட்டங்களாக நடத்தப்படும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் முதலில் தங்களுடைய சொந்த மைதானத்தில் போட்டியிடும்.
அதன் பின் 2 போட்டிகளிலும் சேர்த்து எந்த அணி அதிக கோல் அடிக்கிறதோ அதுவே வெற்றி பெறும். அந்த வகையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் அணி, அத்லெடிக் கிளப் அணியுடன் மோதியது. இதில் 7 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி வெற்றி பெற்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
இதைத்தொடர்ந்து மற்றொரு அரையிறுதியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் போடோ கிளிம்ட் அணிகள் மோதிக் கொண்டது. இதில் டோட்டன் ஹாட்ஸ்பர் அணி 5 கோல்கள் அடித்து வெற்றி பெற்ற நிலையில் இறுதி போட்டிக்கு தேர்வாகியது. இந்நிலையில் அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற 2 அணிகளும் நேற்று இறுதிப் போட்டியில் மோதியது.
மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் விளையாடிய போது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1-0 என்ற கோல் அளவில் மான்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்தி வெற்றி கோப்பையை பெற்றது. இந்த வெற்றி டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் வீரர் ஜான்சன் அடித்த கோல் மூலம் அணிக்கு வெற்றி கிடைத்தது என்று கூறுகின்றனர். மேலும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.