
உதயநிதி ஸ்டாலின் கடந்த 1977-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளியான முதல் படம் விஜய் த்ரிஷா நடித்த குருவி திரைப்படமாகும். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை வழங்குனராக கொண்டு வந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இது கதிர்வேலன் காதல், சரவணன் இருக்க பயமேன், மாமன்னன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞரணி செயலாளர், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருக்கிறார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பேரனும், இப்போதைய முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும் ஆவார்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக சட்டசபையில் 22 தொகுதிகளுக்கான இடை தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.