
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதும் பெரும் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான 60 ஓட்டங்கள் ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளது. அதே நேரத்தில் பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து வெற்றி நடை போட்டு உள்ளது. இதனால் இரு அணிகளும் விளையாடும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் UAE கிரிக்கெட் வீரர் இப்ரார் அகமது தவார், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விளையாட்டு வீரரான விராட் கோலியின் பாராட்டை பெற்றுள்ளார். ஐசிசி சாம்பியன் டிராபியில் விளையாடுவதற்கு முன்னர் விராட் கோலி நெட் பயிற்சியில் விளையாடினார். இந்த பயிற்சியின் போது UAE கிரிக்கெட் வீரர் இப்ரார் தனது திறமையான பந்துவீச்சால் விராட் கோலியை திணறடித்து உள்ளார்.
இதுகுறித்து வீடியோவில் கோலி நேரடியாக கூறியதாவது,”மிகவும் நன்றாக பந்து வீசினார்.. எனக்கு நிறைய உதவி உள்ளார்”என பாராட்டினார். இந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்து இப்ரார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்ரார் ஏற்கனவே டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ளார். அப்போதே தனது விளையாட்டின் மூலம் அனைவரது கவனத்தையம் ஈர்த்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram