தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை விளக்கக் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்த நலத்திட்டங்கள் குறித்து சில தகவல்களை தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு புதிய அரசியலை பார்க்க முடிகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மக்களிடம் பெட்டி பெட்டியாக புகார்கள் பெறப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிவுடன் தேர்தல் சமயத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தார்.

அதன் பிறகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது. முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மனு கொடுத்தால் அதை பொறுமையாக வாங்கிக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க கூறுகிறார். மக்கள் திட்டங்களை சரியான முறையில் அதிகாரிகள் செயல்படுத்துகிறார்களா என்பதை கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் மூலம் அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் என எந்த பிரச்சினை வந்தாலும் ஒரு பக்கம் அதிகாரிகளையும் ஊழியர்களையும் சரியான முறையில் வேலை வாங்குவதோடு அவரும் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சனைகளை சரி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

மக்களின் பிரச்சினைகள் வார்ரூம்கள் மூலம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறார். குறிப்பாக சமூக வலைதளங்களில் தங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு சிகிச்சை செய்ய முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என குழந்தைகள் வீடியோவாக பேசி வெளியிட்டிருந்தனர்.

இந்த குழந்தைகளுக்கு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்தார். பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவும் தொழில் வளர்ச்சிகளை மேம்படுத்துவதற்காகவும் 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் இந்த மசோதாவுக்கு தொழிற்சங்கங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உடனடியாக தமிழக அரசு 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றது. மேலும் இப்படி மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.