மத்திய அரசின் நிறுவனமான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் சிலவற்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றரிக்கை ஒன்று வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக கட்சி புதுச்சேரியில் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கலந்து கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆளுநர் சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

அவர் ஜிப்மர் மருத்துவமனையின் அறிவிப்புக்கு ஆதரவாக பேசினார். அதோடு தமிழ்நாட்டில் வேலை இல்லாமல் புதுச்சேரியில் வந்து போராட்டம் செய்கிறார்கள். விழுப்புரம் எம்பி ஏன் புதுச்சேரிக்கு வர வேண்டும். அவர் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை அவர் பார்க்கட்டும் என்று கூறினார். அதன் பிறகு ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே நடக்கும் மோதல் போக்கு குறித்து நிருபர்கள் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அவருடைய கருத்துக்கு வேண்டுமானால் எதிர்ப்புகள் கிளம்பலாம்.

ஆனால் ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக அரசியல் குறித்து அடிக்கடி தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மக்கள் பிரச்சனைக்காக விழுப்புரம் எம்பி புதுச்சேரிக்கு சென்று போராட்டம் நடத்திய நிலையில் அவர் ஏன் புதுச்சேரியில் வந்து போராட்டம் நடத்த வேண்டும் அவர் தொகுதியில் வேலையை பார்க்கலாமே என தமிழிசை சௌந்தரராஜன் கூறியதை அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள். அதாவது தமிழிசை சௌந்தர்ராஜன் மட்டும் தமிழக அரசியல் பற்றி பேசலாம் ஆனால் மக்கள் பிரச்சினைக்காக விழுப்புரம் எம்பி புதுச்சேரியில் வந்து போராட்டம் நடத்தக் கூடாதா என கேள்வி எழும்பியுள்ளது.