
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று 39 வயதான வினித் துபே முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவர் உயிர் இழந்ததாகவும் அவரது மனைவி ஜெயா முதலமைச்சர் புகார் அளித்தார்.
இதுகுறித்து ஜெயா கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, எனது கணவர் கடந்த மார்ச் 13ஆம் தேதி எம்பயர் கிளினிக்கில் முடி மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு மறுநாளே அவரது முகம் வீங்கி கடுமையான வலி ஏற்பட்டது. அன்றே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேபோன்று குஷாக்ரா கட்டியார் என்பவர் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் தனது சகோதரரும், மென்பொருள் பொறியாளருமான மாயங்கிற்கும் கடந்த நவம்பர் 18ஆம் தேதி எம்பயர் மருத்துவமனையில் தலைமுடி மாற்று அருவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்கு பிறகு அவருக்கு மார்புமலி மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் மறுநாளை உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, முடிமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள பயிற்சி பெறாத நபர்களை அவர்கள் பணியாமர்த்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திவாரி மற்றும் திரபாதி இருவரும் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தகுந்த பயிற்சியும் படிப்பும் இல்லாமல் மருத்துவர்களின் அலட்சியத்தால் 2 உயிர்கள் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.