மலேசியாவின் கோலாலம்பூர் புக்கிட் ஜலில் மைதானத்தில், ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. விழாவிற்கு கருப்பு நிற கோட்-சூட் அணிந்து செம மாஸாக வருகை தந்த நடிகர் விஜய், அங்கிருந்த நீண்ட ‘ரேம்ப் வாக்’ மேடையில் நடந்து சென்று ரசிகர்களுக்குத் தன் அன்பை வெளிப்படுத்தினார். சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த அந்த மைதானமே விஜய்யின் வருகையால் அதிரும் வகையில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.



நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘TVK… TVK…’ என விஜய்யின் அரசியல் கட்சிப் பெயரை முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். இதைக் கேட்டு மேடையில் புன்னகைத்துக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் ரசிகர்களைப் பார்த்து இது சினிமாவைச் சார்ந்த விழா என்பதால் இங்கே அரசியல் கோஷம் வேண்டாம் என்பது போல மிக மென்மையாகச் சைகை காட்டினார். சினிமாவைச் சினிமா தளத்திலேயே அணுக வேண்டும் என்ற அவரது இந்த முதிர்ச்சியான செயல் மற்றும் அந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.