நடிகர் விஜய், தவெக என்ற கட்சியைத் தொடங்கி, தனது ரசிகர்கள் மூலம் அரசியல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் தவெகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். விஜய்யை சினிமாவில் தலைவராக ஏற்போம், அரசியலில் ஏற்க மாட்டோம் எனக் கூறியுள்ளனர். மேலும், சீமானுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.