திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பித்து ஓடுகிறது.

இதுகுறித்து அறிந்த மலை கிராம மக்களும், வனத்துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படாததால் தீ வேகமாக பரவுகிறது எனவும், நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.